இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா!
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் – இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது.
ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது.
இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும்.
இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்… முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:
அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ:
“பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்”.
இப்போது சொல்லுங்கள்!
யார் நாகரீகமானவர்கள்?
யார் நாகரீகமற்றவர்கள்? என்று.”
(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் ‘In the Hands of Taliban: Her Extra ordinary Story’ என்ற நூலின் இணையாசிரியர் ஆவார்.
இந்த நூலாசிரியரை hermosh@aol.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது ‘நியூஸ் வீக்’ பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)
THANKS TO:
http://vapuchi.wordpress.com/
யுவான் ரிட்லிக்கு விசா மறுப்பு: இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா!
14 Jan 2013
ஹைதராபாத்: பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான யுவான் ரிட்லிக்கு இந்தியாவுக்கு வர விசாவை மறுத்துள்ளது மத்திய அரசு.
ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள யுவான் ரிட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு வர விசாவுக்கு விண்ணப்படித்திருந்தார்.
ஆனால், அவருக்கு விசா அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.
ஏற்கனவே கேரள மாநிலத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தபோதும் இந்திய அரசு விசா அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், யுவான் ரிட்லி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக மாநாட்டில் உரையாற்றினார் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தனது கண்டனத்தை பதிவுச்செய்துள்ள யுவான் ரிட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:
பெண்கள் உரிமைகள் குறித்து 50 ஆயிரம் பெண்கள் மத்தியில் உரையாற்றும் வாய்ப்பை இந்திய அரசு மறுத்துள்ளது.
டெல்லியில் கூட்டு பாலியல் கொடுமை போன்ற அக்கிரமங்கள் நடந்த பிறகும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் அதன் தீவிரத்தன்மையை உணரவில்லை.
பெண்களை 2-ஆம் தர குடிமக்களாகவே பார்க்கின்றனர் என்று யுவான் ரிட்லி கூறியுள்ளார்.
லண்டனில் வாழும் யுவான் ரிட்லி 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் பத்திரிகை பணிக்காக சென்றபொழுது தாலிபான் போராளிகளால் கைதுச் செய்யப்பட்டார்.
2003-ஆம் ஆண்டு விடுதலைச் செய்யப்பட்ட யுவான் ரிட்லி பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
THANKS TO : THOOTHU ONLINE.
CLICK >>>>
யுவான் ரிட்லி வரலாறு <<<<< TO SEE VIDEO.
0 comments:
Post a Comment