ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.
நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் உயர்ந்ததரத்தில் ஐரோப்பா காணப்படுகின்றது. எனினும் ஐரோப்பாவுக்கு நாகரீகத்தையும்,மேற்கூறப்பட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் முஸ்லிம்களே என்பதை எத்தனை பேர் அறிவர்.
புனித அல்குர்ஆன் இறக்கப்பட்டதிலிருந்து அதாவது கி.பி.750 முதல் உலகில் தொடர்ச்சியாக முஸ்லிம் விஞ்ஞானிகள் தோண்றினர்.அவர்களில் ஜப்பார்,கரிஸ்மா, ராய்ஸ்,முஆத்,அபார், அல்பிரூனி மற்றும் அவீசின்னா(அலி இப்னு ஸீனா) போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.கி.பி 13ம்நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் இரசாயனவியல்,கணிதம்,புவியியல், பௌதீகவியல்,வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.
அல் ஜீப்ரா எனப்படும் அட்சரகணிதத்தை கண்டுபிடித்த பெருமை முஹம்த் பின் கரிஸ்மாவைச்சாரும். மடக்கைகள்,வானியல் மற்றும் அதன் பிரயோகங்கள் போன்ற துறைகளில் புகழ்பூத்த விஞ்ஞானியகத் திகழும் முஹம்மத் பின் ஜப்பார் அல் பத்தானி விளங்குகின்றார். வானியல் நாள் காட்டியை கண்டுபிடித்தார். இது திருத்தப்பட்ட வானியல் நாள் காட்டிப்புத்தகம்(கிதாப் அல்ஜீஸ் அஸ்ஸப்பி) என அறியப்படுகிறது.
பூமி,சூரியனை நீள்வட்டப்பாதையில் ஒரு முறைசுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவை 365நாட்கள் 5 மணித்தியாலங்கள் 24வினாடிகள் எனக்கணக்கிட்டார். இக்கணிப்பீடானது 19ம் நூற்றாண்டில் கணிக்கப்பட்ட அளவீட்டில் இருந்து 2நிமிடங்கள் 24வினாடிகளே வித்தியாசத்தை காட்டியது.
மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய முக்கியமான ஒரு ஆய்வையும் அல் பத்தானி மேற்கொண்டார். கலீபா மஹ்மூனின் காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டன. மூஸா பின் ஷாகிரும் அவரது மகன் கரிஸ்மாவும் பூமியின் சுற்றளவு, அகலாங்கு,நெட்டாங்கு என்பவற்றை கணக்கிட்டார்.
குதுபுத்தீன் ஸஹ்ராதி,அவரது மகன் கமாலத்தீன் போன்றவர்களே வானவில்லுக்கு முதன்முதலாக விஞ்ஞானரீதியான விளக்கத்தை முன்வைத்தனர்.ஒளியானது ஒளிமுதலிலிருந்து வெளிப்பட்டு முடிவுவேகத்துடன் இயங்கும் துணிக்ககைளே என ஒளிக்கான வரைவிலக்கத்தை அலிஇப்னுஸீனா(கி.பி. 950-1037) வெளியிட்டார்.
முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான வரலாற்று ஆசிரியராகவும், வைத்தியராகவும் அல்-ராயீஸ் திகழ்கின்றார்.அக்காலத்தில் புகழ்மிக்க இஸ்லாமிய நகரங்களில் மருத்துவமனைகள் காணப்பட்டன.எகிப்தின் கெய்ரோ நகரில் அக்காலத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையொன்று காணப்பட்டது.இம்மருத்துவமணை 8000படுக்கையறைகளை கொண்டிருந்து.
கண்நோய்,காய்ச்சல் மற்றும் சத்திரசிகிச்சை என தனித்தனிப்பிரிவுகள் அம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்தன. சின்னமை நோய்க்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து,அந்நோய் மனிதனுக்கு ஆயுளில் ஒரு தடவையே ஏற்படும் என்ற மருத்துவ உண்மையை அல்-ராயீஸ் நிரூபித்தார்.
கி.பி 600-700 காலப்பகுதியில் உவகில் முதன்முதலாக பல்கலைக்கழக முறையை நிறுவியவர்களும் முஸ்லிம்களாவர். ஐரோப்பாவின் பரிஸ் பல்கலைக்கழகமும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகமும் அதன்கீழான பல்கலைக்கழக முறைகளும் 13ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோற்றம் பெற்றவைகளாகும். இப் பல்கலைக்கழகங்கள் கூட ஆரம்பத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழக நிதஅமைப்பு முறைக்கு ஒத்த நிதி அமைப்பு முறையிலேயே செயற்பட்டன என்பதை வரலாற்று ஆசரியர்கள் உறுதிசெய்துள்ளனர்.
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் உள்ளக கட்டமைப்புக்கள் கூட இஸ்லாமிய பல்கலைக்கழக முறையைச் சார்ந்தவையாகவே காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். போன்ற முறைகள் கூட இஸ்லாமிய வழிமுறையிலிருந்து தோண்றிய மரபுகளாகும்.கணித்தை பொறுத்தமட்டில் பூச்சியத்தையும்,தசமத்தையும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்களாவர்.
ஐரோப்பாவின் விஞ்ஞானப்புரட்சிக்கு இவை வித்திட்டன.அரபு எண் இலக்கணம் ஐரோப்பாவுக்குள் முஸ்லிம்களால் புகுத்தப்பட்டது.மத்திய காலப்பகுதி ஐரோப்பாவின் இருண்ட காலப்பகுதியென அறியப்படுகின்றன.
முஸ்லிம்கள் விஞ்ஞானத்திலும், நாகரிகத்திலும் உயர்நிலையில் இருந்தபோது, ஐரோப்பியர்கள் நாகரீகமற்றவர்களாக மோசமான நிலையில் வாழ்ந்துவந்தனர்.
பக்தாத்,டமஸ்கஸ்,கெய்ரோ மற்றும் கொர்டோபா போன்ற நகரங்கள் நாகரிகத்தின் கேந்திர நிலையமாகக் காணப்பட்டன.பக்தாத் முஸ்லிம்களின் ஆடசிபீடமாக இருந்தபோது,ஸ்பெய்ன் முஸ்லிம்களின் கல்விநிலையமாக காணப்பட்டது.அக்காலத்தில் ஸ்பெய்னின் தலைநகர் கெர்டோபாவில் ஐரோப்பியா மற்றும் உலகின் பலபாகங்கலிலிருந்தும் மாணவர்கள் வந்து முஸ்லிம் அறிஞர்களின் புத்தகங்கள் லத்தீன் போன்ற மொழிகளுக்கு மாற்றப்பட்டன.
எனினும் அப்பாஸிய கிலாபத்தின் இறுதிப்பகுதியில் தாத்தரியரினால் பக்தாத் நகரம் தாக்கப்பட்டது.அதே காலப்பகுதியில் ஸ்பெய்ன் மீண்டும் கைப்பற்றப்பட்டது.இதனால் முஸ்லிம்களின் அறிவுப்பொக்கிஷங்கள் ஐரோப்பியரினால் திருப்பட்டது.இது ஐரோப்பா விஞ்ஞானத்துறையில் துரிதமுன்னேற்றம் அடைய அடிப்படைக்காரணமாக விளங்கியது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
அப்பாஸிய கிலாபத்துக்குப்பின்னர், உஸ்மானியகிலாபத்தோற்றம் பெற்றது. உஸ்மானிய கிலாபத் ஆட்சியின் போது,மத்தியகாலப்பகுதியில் முஸ்லிம்கள் விஞ்ஞானத்துறையில் அடைந்தஅளவு முன்னேற்றத்தை அடையவில்லை.எனினும் உஸ்மானியர்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் விஞ்ஞானிகள் உருவானதுடன் பல கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. நீர்பம்பி,வானியல் நீள்உருளை மற்றும் வானியல் கடிகாரம் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
DIPவுடன் இணையுங்கள்
DIPவுடன் இணையுங்கள்