டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
இதற்கு மிக முக்கியக் காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், காவல்துறையினரின் அலட்சியமும், வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர்கள் காட்டும் மெத்தனமும் தான். பாலியல் பலாத்காரங்கள் காலம் காலமாக நடந்தாலும் டெல்லி பெண்ணுக்கு நேர்ந்த அவலம் நாட்டின் இதயத்தை ஒட்டுமொத்தமாக பதம் பார்த்துள்ளது. மக்கள் கலங்கிப் போயுள்ளனர். பலாத்காரத்துக்கு எதிராக சமூகத்தில் கடும் கோபமும் கொந்தளிப்பும் உருவாகியுள்ளது.
இந்த கொடுமையான சம்பவத்தின் பின்னணியில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த தேசத்தின் கோபத்தை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பாலியல் கொடுமைகளுக்கு மிக அதிகபட்ச தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டியது ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளின் கடமை. ஏதோ மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் தான் கற்பழிப்புகள் நடந்துள்ளது போல காவி பாஜக டிராமா போட்டு இதிலும் அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்வதால் பலனில்லை.
ஆளும் கட்சியை நெருக்கி மிகக் கடுமையான தண்டனையைக் கொண்டு வர வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கும் உண்டு. அதே போல எல்லா பிரச்சனைகளைப் போல இதையும் கிடப்பில் போட்டுவிட்டு, அப்பாடா மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நிம்மதி தேடும் படலதத்தை சோனியா காந்தி உடனடியாக நிறுத்திவிட்டு, தானே முன் வந்து மிகக் கடுமையான சட்டத் திருத்தத்துக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியதும் மிக அவசியம்.
இந்த விஷயத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்களைப் பற்றி யாரும் கவலைப்படவும் கூடாது. உலகிலேயே மிகப் பெரிய மனித உரிமை மீறல் பாலியல் கொடுமை தான். இதனால் இதில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை என்பது மிக மிகப் பொறுத்தமானதே.
சீர்கெடும் சட்டம் ஒழுங்கு... இஸ்லாமிய சரியத் சட்டதை களமிறங்க வேண்டிய நேரம் இது!