Friday, November 30

பாலஸ்தீனம் தனி நாடு

0 comments
ஐ.நா.: பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஐ.நா.வில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா உள்பட 138 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

.
 யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது.
ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உள்பட 138 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன.

பாலஸ்தீனுக்கு எதிராக 9 நாடுகள் வாக்குபதிவு.......

1) இஸ்ரேல்

2) அமெரிக்கா

3) கனடா

3) மார்ஷல் அயர்லாந்து

5) பலாவ்

6) நவ்று

7) ஸ்கெட்ச் ரிபப்ளிக்

8) மைக்ரோனேசியா

9) பனாமா

  நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன. இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது. எனினும், உறுப்பு நாடுகள் பட்டியலில் சேராத ஐ.நா. கண்காணிப்பு நாடுகள் வரிசையில் பாலஸ்தீனம் இடம்பெறும். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில்,வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதாலும் தீர்மானம் நிறைவேறி உள்ளது என்றார்.


ஓட்டெடுப்புக்கு முன்பு பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் பேசுகையில், ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறினால், பாலஸ்தீனத்துக்கு பிறந்த நாள் சர்ட்டிபிகேட் வழங்கியது போல் இருக்கும்Õ என்று தெரிவித்தார். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இன படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பாலஸ்தீனம் வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும். இதுகுறித்து இங்கிலாந்து கூறுகையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து கிரிமினல் கோர்ட்டை பாலஸ்தீன தலைவர்கள் அணுக முடியும் என்று தெரிவித்துள்ளது.

DIPவுடன் இணையுங்கள்

http://www.facebook.com/groups/dinulislamparadise/

யாரு உண்மையான தீவிரவாதி?

0 comments
உண்மையான தீவிரவாதி?

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.


1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.
தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

- என்று கூறுகின்றன.

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!

பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...

1)1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

2) 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

3) 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

4) 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

5) 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

6) 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்.
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

7) 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

8)1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

9) முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?

10) 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

11) 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.

12) இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

13) அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

14) 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

15) நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

16) பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

17) 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.

18) 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.

19) அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.

20) 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

21) 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!
A) இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு

B) ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு

C) உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

D) மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு

இது மட்டுமா நம் இந்தியாவில் கூட

A) பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

B) திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

C)  அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.

D)  ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது. .

மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

E) சிவசேனா... சொல்லவே தேவையில்லை.,

பால் தாக்கரேயின் முழக்கம் (?) பற்றி ஏஷியா டைம்ஸ் இப்படி அறிவித்தது:

"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.
சங்பரிவார்கள் அமைப்பு இன்னும் ஒரு படி மேல போயி ஒரு Hindu Unity எனும் தளம் உருவாக்கி கொல்லப்பட வேண்டியவர்கள் குறித்த ஒரு block list ஐ தயாரித்து வைத்து இருக்கிறது.,

F)  நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் -
2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்)
எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக

? 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்
? இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்
? தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...
யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ,
I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ,
மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ,
உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ,
பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ,
L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ,
ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ,
A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..?

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!

சத்தியம் வந்ததுஅசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81)

எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

DIPவுடன் இணையுங்கள்

http://www.facebook.com/groups/dinulislamparadise/

நன்றி :
Dr.ZAHIR NAIK

REFERENCE :
http://www.foxnews.com/story/0,2933,161827,00.html
http://satp.org/
http://en.wikipedia.org/wiki/Naxalite
All_Tripura_Tiger_Force
Friedländer, Saul. Nazi Germany and the Jews. New York: HarperCollins, 1997.http://en.wikipedia.org/wiki/World_War_I
http://www.loonwatch.com/2010/01/not-all-terrorists-are-muslims/
http://ta.wikipedia.org/sivasena
http://hinduunity.org/hitlist.html
http://www.naanmuslim.com

Tuesday, November 27

முன்னோடி முஸ்லிம்கள்

0 comments

ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின்   பங்களிப்பு.



நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் உயர்ந்ததரத்தில் ஐரோப்பா காணப்படுகின்றது. எனினும் ஐரோப்பாவுக்கு நாகரீகத்தையும்,மேற்கூறப்பட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் முஸ்லிம்களே என்பதை எத்தனை பேர் அறிவர்.

புனித அல்குர்ஆன் இறக்கப்பட்டதிலிருந்து அதாவது கி.பி.750 முதல் உலகில் தொடர்ச்சியாக முஸ்லிம் விஞ்ஞானிகள் தோண்றினர்.அவர்களில் ஜப்பார்,கரிஸ்மா, ராய்ஸ்,முஆத்,அபார், அல்பிரூனி மற்றும் அவீசின்னா(அலி இப்னு ஸீனா) போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.கி.பி 13ம்நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் இரசாயனவியல்,கணிதம்,புவியியல், பௌதீகவியல்,வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.  

அல் ஜீப்ரா எனப்படும் அட்சரகணிதத்தை கண்டுபிடித்த பெருமை முஹம்த் பின் கரிஸ்மாவைச்சாரும். மடக்கைகள்,வானியல் மற்றும் அதன் பிரயோகங்கள் போன்ற துறைகளில் புகழ்பூத்த விஞ்ஞானியகத் திகழும் முஹம்மத் பின் ஜப்பார் அல் பத்தானி விளங்குகின்றார். வானியல் நாள் காட்டியை கண்டுபிடித்தார். இது திருத்தப்பட்ட வானியல் நாள் காட்டிப்புத்தகம்(கிதாப் அல்ஜீஸ் அஸ்ஸப்பி) என அறியப்படுகிறது.


பூமி,சூரியனை நீள்வட்டப்பாதையில் ஒரு முறைசுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவை 365நாட்கள் 5 மணித்தியாலங்கள் 24வினாடிகள் எனக்கணக்கிட்டார். இக்கணிப்பீடானது 19ம் நூற்றாண்டில் கணிக்கப்பட்ட அளவீட்டில் இருந்து 2நிமிடங்கள் 24வினாடிகளே வித்தியாசத்தை காட்டியது.


 மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய முக்கியமான ஒரு ஆய்வையும் அல் பத்தானி மேற்கொண்டார். கலீபா மஹ்மூனின் காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டன. மூஸா பின் ஷாகிரும் அவரது மகன் கரிஸ்மாவும் பூமியின் சுற்றளவு, அகலாங்கு,நெட்டாங்கு என்பவற்றை கணக்கிட்டார்.  


குதுபுத்தீன் ஸஹ்ராதி,அவரது மகன் கமாலத்தீன் போன்றவர்களே வானவில்லுக்கு முதன்முதலாக விஞ்ஞானரீதியான விளக்கத்தை முன்வைத்தனர்.ஒளியானது ஒளிமுதலிலிருந்து வெளிப்பட்டு முடிவுவேகத்துடன் இயங்கும் துணிக்ககைளே என ஒளிக்கான வரைவிலக்கத்தை அலிஇப்னுஸீனா(கி.பி. 950-1037) வெளியிட்டார்.


முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான வரலாற்று ஆசிரியராகவும், வைத்தியராகவும் அல்-ராயீஸ் திகழ்கின்றார்.அக்காலத்தில் புகழ்மிக்க இஸ்லாமிய நகரங்களில் மருத்துவமனைகள் காணப்பட்டன.எகிப்தின் கெய்ரோ நகரில் அக்காலத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையொன்று காணப்பட்டது.இம்மருத்துவமணை 8000படுக்கையறைகளை கொண்டிருந்து. 
கண்நோய்,காய்ச்சல் மற்றும் சத்திரசிகிச்சை என தனித்தனிப்பிரிவுகள் அம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்தன. சின்னமை நோய்க்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து,அந்நோய் மனிதனுக்கு ஆயுளில் ஒரு தடவையே ஏற்படும் என்ற மருத்துவ உண்மையை அல்-ராயீஸ் நிரூபித்தார்.


கி.பி 600-700 காலப்பகுதியில் உவகில் முதன்முதலாக பல்கலைக்கழக முறையை நிறுவியவர்களும் முஸ்லிம்களாவர். ஐரோப்பாவின் பரிஸ் பல்கலைக்கழகமும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகமும் அதன்கீழான பல்கலைக்கழக முறைகளும் 13ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோற்றம் பெற்றவைகளாகும். இப் பல்கலைக்கழகங்கள் கூட ஆரம்பத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழக நிதஅமைப்பு முறைக்கு ஒத்த நிதி அமைப்பு முறையிலேயே செயற்பட்டன என்பதை வரலாற்று ஆசரியர்கள் உறுதிசெய்துள்ளனர்.  


ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் உள்ளக கட்டமைப்புக்கள் கூட இஸ்லாமிய பல்கலைக்கழக முறையைச் சார்ந்தவையாகவே காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். போன்ற முறைகள் கூட இஸ்லாமிய வழிமுறையிலிருந்து தோண்றிய மரபுகளாகும்.கணித்தை பொறுத்தமட்டில் பூச்சியத்தையும்,தசமத்தையும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்களாவர்.


 ஐரோப்பாவின் விஞ்ஞானப்புரட்சிக்கு இவை வித்திட்டன.அரபு எண் இலக்கணம் ஐரோப்பாவுக்குள் முஸ்லிம்களால் புகுத்தப்பட்டது.மத்திய காலப்பகுதி ஐரோப்பாவின் இருண்ட காலப்பகுதியென அறியப்படுகின்றன.


முஸ்லிம்கள் விஞ்ஞானத்திலும், நாகரிகத்திலும் உயர்நிலையில் இருந்தபோது, ஐரோப்பியர்கள் நாகரீகமற்றவர்களாக மோசமான நிலையில் வாழ்ந்துவந்தனர்.  
பக்தாத்,டமஸ்கஸ்,கெய்ரோ மற்றும் கொர்டோபா போன்ற நகரங்கள் நாகரிகத்தின் கேந்திர நிலையமாகக் காணப்பட்டன.பக்தாத் முஸ்லிம்களின் ஆடசிபீடமாக இருந்தபோது,ஸ்பெய்ன் முஸ்லிம்களின் கல்விநிலையமாக காணப்பட்டது.அக்காலத்தில் ஸ்பெய்னின் தலைநகர் கெர்டோபாவில் ஐரோப்பியா மற்றும் உலகின் பலபாகங்கலிலிருந்தும் மாணவர்கள் வந்து முஸ்லிம் அறிஞர்களின் புத்தகங்கள் லத்தீன் போன்ற மொழிகளுக்கு மாற்றப்பட்டன.


எனினும் அப்பாஸிய கிலாபத்தின் இறுதிப்பகுதியில் தாத்தரியரினால் பக்தாத் நகரம் தாக்கப்பட்டது.அதே காலப்பகுதியில் ஸ்பெய்ன் மீண்டும் கைப்பற்றப்பட்டது.இதனால் முஸ்லிம்களின் அறிவுப்பொக்கிஷங்கள் ஐரோப்பியரினால் திருப்பட்டது.இது ஐரோப்பா விஞ்ஞானத்துறையில் துரிதமுன்னேற்றம் அடைய அடிப்படைக்காரணமாக விளங்கியது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.  


அப்பாஸிய கிலாபத்துக்குப்பின்னர், உஸ்மானியகிலாபத்தோற்றம் பெற்றது. உஸ்மானிய கிலாபத் ஆட்சியின் போது,மத்தியகாலப்பகுதியில் முஸ்லிம்கள் விஞ்ஞானத்துறையில் அடைந்தஅளவு முன்னேற்றத்தை அடையவில்லை.எனினும் உஸ்மானியர்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் விஞ்ஞானிகள் உருவானதுடன் பல கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. நீர்பம்பி,வானியல் நீள்உருளை மற்றும் வானியல் கடிகாரம் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

DIPவுடன் இணையுங்கள்

Friday, November 23

துப்பாக்கி”திரைப்படத்தின் இசுலாம் விரோத போக்கு

0 comments


“துப்பாக்கி”திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுணம் ‘விஸ்வரூபம்’ எடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒருபகுதி. வெகு அன்மையில் அமெரிக்காவில் நாயகத்தை இழிவுபடுத்தும் ஒரு நாடகம் அரங்கேறியது, நேற்றுவரை இந்தியாவில் நடந்தது இன்றும் நடந்துள்ளது. நாமும் நமது மார்க்கமும் ஊடகங்களில் தாக்கப்படுவது இது புதிதல்ல.

படங்களில் முஸ்லிம்களை தாக்குவதும் தெரியாமல் இடம் பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் திரையுலகின்வேடிக்கை நிறைந்த வாடிக்கையான நடவடிக்கையாகிவிட்டது. பல ஆயிரம் நுணுக்கங்கள் பார்த்தும், இந்து சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தும் படம் எடுக்கும் இவர்கள், இஸ்லாம், முஸ்லிம் உலகம் பற்றிய எதார்த்தங்களைமறந்தது ஏன்? அதுபற்றி தெரியாமல் போனது எப்படி? இது அபத்தம், முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் முயற்சி. இவர்களின் திட்டமிட்ட செயல். இழிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை.

இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து, சிறப்பாய் நடித்து, வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி, தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி, தலைவர்களாக்கி, உலக நாயகர்களாக்கி, கலாநிதிப் பட்டம் கொடுத்துக் கெளரவித்து, அவர்களின் கட்அவுட்டுகளுக்கு தன் சொந்தப் பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் அறிவு ஜீவிகள் நிறைந்த நாடு இந்தியா.

இந்த மக்களிடத்தில் தன் தொழிலில் இலகுவாக இலாபம் ஈட்ட தன் வேஷ நாடகத்தை இலவசமாக விளம்பரப்படுத்த இழிவான மிகவும் கேவலமான தரங்கெட்ட பல வழிகளை திரையுலகினர் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கும் சதைக்கும் நல்ல வரவேற்ப்புக் கிடைக்கும் என்பதனாலும் முஸ்லிம்கள் எதிர்த்தால் இலவச விளம்பரமும் கிடைக்கும் என்பதனாலும் இந்த வியாபார யுக்தியை தொடர்ந்து இந்தக் கூத்தாடிக் கூட்டம் செய்துவருகின்றது. குறிப்பாக இதைக் கூத்தாடிகளான கமல(காம )ஹாஷன், குடிகாரன் விஜயகாந்த், அறிவுகட்ட   அர்ஜூன், மன்னகட்டி மணிரத்தினம் தொடக்கம் பலர் தொடர்ந்து தன் படங்களில் செய்து வருகின்றனர். இதில் இன்று ஜெராக்ஸ் விஜய், மூலகட்ட முருகதாஸ் எனும் கூத்தாடிக் கூட்டம் புதிதாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்.

.இந்திய ராணுவம் காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் மூலகட்ட  முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் ஜெராக்ஸ் விஜய் சம்மதிப்பாரா?

நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.

அறிவுகட்ட  அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.

உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.

எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண துருப்பிடித்த மசாலா படமே.

நீங்கள் இன்னும் கொலைகாரன் கோட்சேயை ஹீரோவாக்கி, காந்தியை வில்லனாக்கி 'ஹேராம்' அல்லவா எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இதற்கு வெட்கப்பட வேண்டாமா நீங்கள்..? இதுதான் உங்கள் தேசபக்தியின் நிறமா..? மெய்யான நடிப்பல்லவா இது..!

விஜயகாந்த், அர்ஜுன்‌, மணிரத்தினம் போன்றாராவது பெரும்பாலும் பாகிஸ்தான் முஸ்லீம்களைத்தான்... பயங்கரவாதிகளாக திரித்தனர்..!ஆனால்... கமலும் விஜயும்... நம் எதிர்வீடு... அடுத்தவீடு... பக்கத்து வீட்டு சகோதரனை அல்லவா பயங்கரவாதியாக காட்டுகிறார்கள்..? இது அராஜக அக்கிரம அநியாயம் அல்லவா...? இதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்..!

முண்டியடித்து முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் முஸ்லிம்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு காத்தாடிகள் போல் செயற்படும் ரசிகர் மன்றங்களில் எம் முஸ்லிம்கள் இருக்கும் வரை அவர்களின் வியாபார வெற்றியில் ஒரு முடியளவு நஷ்டதைக் கூட எம்மால் ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.

 சத்தியம் வந்ததுஅசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81

எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

DIPவுடன் இணையுங்கள்




Thursday, November 22

அல்குர்ஆனில் விஞ்ஞானம்!

0 comments

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!
இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.
“”அனைத்து உயிர்ப் பிராணிகளையும், அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். அவற்றில் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு.(இவ்வாறு)தான் நாடியதை நாடியதிலிருந்து அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு படைக்கும் பொருட்டு யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். (அல்குர்ஆன் 24:45)
முட்டை முன்பு வந்ததா? குஞ்சு முன்பு வந்ததா? என்று இன்றும் தங்களை குழப்பிக் கொண்டு இருப்பவர்கள் இத்தகைய இறை வசனத்தின் மூலம் தெளிவு பெறமுடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: எல்லாப் பிராணிகளையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் ஊர்ந்து செல்லக் கூடியவையும், இரு கால்களில் நடப்பவையும், நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு என்று கூறுகிறான்.
ஊர்ந்து செல்வது பாம்பு, புழு,பூச்சிகளாகும். இரண்டு கால்கள் உடையவை பறவை இனங்களைக் குறிப்பிடுவது, நான்கு கால்களை உடையவை என்பது மிருகங்களை குறிப்பிடுவது.
அல்லாஹ் மிகத் தெள்ளத் தெளிவாகவே மனிதர்களுக்கு விளக்கியுள்ளான். இத்தகைய நிலைப்பாடுகளை அல்குர்ஆனிலிருந்து ஆராய்ச்சி செய்த பிரெஞ்ச் நாட்டு விஞ்ஞானி “லமார்க்' 1744 முதல் 1829 வரை ஆராய்ச்சி செய்துவிட்டு பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதேபோல் 1809 முதல் 1888 வரை டார்வினும் ஆராய்ச்சி செய்துவிட்டு வான் மறையின் பரிணாமக் கோட்பாட்டை வலுவான ஆதாரங்களுடன் நிலைநாட்டுகிறார்.
“”நீர் நிலைகளிலிருந்து உயிரினங்கள் தோன்றியுள்ளன. இது விஞ்ஞானிகள் கதை.
அல்லாஹ் கூறுகிறான்.
“அல்லாஹ் எவ்வாறு முதல் முறையாக படைக்கிறான் என்பதனையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கிறான் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும்.” (அல்குர்ஆன் 29:19,20)
அல்லாஹ் தனது ஆற்றலை இவ்வாறு வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்விற்கு படைத்தல் என்பது எவ்விதக் கஷ்டமும் இல்லை. அவன் ஒன்றை நினைத்து உருவாக்க நினைத்தால் அது உடன் உருவாகிவிடும். விஞ்ஞான வளர்ச்சிகள் எவ்வளவு வந்தாலும் குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக எவ்வித விஞ்ஞானத்தையும் கண்டு பிடித்துவிட முடியாது.
சுமார் 1430 ஆண்டுகளுக்கு முன் உம்மி நபி என்று போற்றப்படும் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் எடுத்துரைத்த இத்தகைய அற்புதமான ஆராய்ச்சி வசனங்கள் இன்னும் ஏராளமாக அல்குர்ஆனில் புதைந்து கிடக்கின்றன.
இன்றைய காலங்களில் மழையைப் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் செயற்கை மழை பொழியும் திட்டத்தை உருவாக்கினார்கள். அதுவும் இறை வசனப்படியேதான் செய்ய முடிந்தது. மேகங்களின் கூட்டங்களை இணைக்கச் செய் வது. அதன் பிறகு அதனை குளிரச் செய்வது. மேகம் குளிர்ந்து விட்டால் தண்ணீராகி விடும். இவற்றைத்தான் விஞ்ஞானிகள் இந்த நூற் றாண்டில் செய்தார்கள்.
14 நூற்றாண்டுக்கு முன் அல்லாஹ்வின் அல்குர்ஆன் எவ்வாறு விளக்குகிறது என்பதனை பார்ப்போம்.
நபியே நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்ந்து அடர்த்தியாக்குகிறான். அதன் பிறகு அதன் நடுவேயிருந்து மழை பொழிவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்திலிருந்து மழையைப் போல மேகக் கூட்டத்திலிருந்து பனிக் கட்டியையும் இறக்கி வைக்கின்றான். (24:43)
குர்ஆனின் வசனப்படியே செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை விஞ்ஞானிகள் செய்து காட்டினார்கள். மேலும் இந்த மேகக் கட்டியின் மூலமாகவே பனிக் கட்டிகள் இறங்குகின்றன என்பதனையும் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அது மட்டுமல்ல சமீப காலங்களில் அரசாங்கம் ஒரு திட்டத்துடன் ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதுதான் மழைநீர் சேகரிப்புத் திட்டம். இது வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அற்புதச் சட்டம் என்பதனை இதோ அல்குர்ஆன் விளக்குகிறது.
“”இன்னும் காற்றுகளைச் சூழ் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து அதனை உங்களுக்கு நாம் (குடிநீராக) புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேகரித்து வைப்பவர்களாக இல்லை” ( அல்குர்ஆன்: 15:22)
மழைத் தண்ணீரை சேகரித்து வைத்திட வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் அறிவித்துள்ளான். அந்த மழைதான் நமக்கு குடி நீராகவும் மண்ணில் விளையக்கூடிய பயிர்களுக்கு உயிராகவும் உள்ளது.
“”… வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது வரண்டு போனதை உயிர்ப்பிப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:24)
வல்லோனின் அல்குர்ஆனில் ஒவ்வொரு எழுத்துக்களிலும் விஞ்ஞானத்தை விளக்கி காட்டுகிறது. இந்த இறைவசனம் இறங்கிய இடம் மழைகள், விவசாயங்கள் இல்லாத பாலைவனப் பிரதேசமாக அரேபியா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
தற்போது நமது அரசாங்கம் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது. அல்குர்ஆனில் புதைந்துள்ள வசனம் விஞ்ஞானத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே அமைந்து உள்ளது என்பதனை உணர முடிகிறது. அதனால்தான் அல்லாஹ் தன் வசனங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இதனை சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன என்று கூறுகிறான்.
மேலும் பூமி தட்டையானது என்று இன்றும் நம் மெளலவிகள் கற்றுவரும் கல்விக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிறது. ஆனால் வல்ல இறைவன் தன் நெறிநூலில் “”நிச்சயமாக அல்லாஹ்தான் இரவை பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான்… என்பதை நீர் பார்க்கவில்லையா?' (31:29)
இரவு படிப்படியாக மெல்ல மெல்ல பகலுக்கு மாறுவதும், இதுபோல் பகல் மெல்ல, மெல்ல இரவுக்கு மாறுவதையும் பார்க்கும் போது பூமி உருண்டை வடிவம் கொண்டது தான் என்பதனை அல்லாஹ் மறைவாகவே குறிப்பிடுகிறான்.
இதனை முதன் முறையாக 1597ம் ஆண்டு கடல் பயணம் மேற்கொண்ட சர்ஃபிரான்ஸிஸ் டிரேச் என்ற விஞ்ஞானிதான் ஆராய்ந்து பூமி உருண்டை என்பதனை அறிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் அருள்நெறிநூல் குறிப்பிட்டதை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வெளியாக்கி யுள்ளார்கள். இதே நிலையில்தான் பூமி, சூரியன், சந்திரன் போன்றவற்றை உருவாக்கிய வல்ல இறைவன் அவற்றின் நிலைகளை குறிப்பிடும்போது சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன மற்ற கோள்கள் என்று கூறுகிறான்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதில்தான் இரவும்-பகலும் ஏற்படுகிறது. இந்த பூமியின் மீதுதான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் உள்ளன. இந்த பூமியின் மீது விழும் சூரியனின் ஒளிக் கதிர்கள்தான் 24 மணி நேரத்திற்குள் சுற்றி முடிக்கிறது. சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி அதுவே ஒளியை பூமிக்கு அளிக்கிறது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.
“”சந்திரனை பிராசமாகவும், சூரியனை ஒளிக் கதிராகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” ( 71:15,16)
மேலும் கூறுகின்றான் “”…. காலக் கணக்கை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்….” (6:96)
சந்திரன் தன் அச்சின் மீது தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. பூமியை சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அவகாசம் 29.53059 நாட்கள் பிடிக்கின்றன என்று அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஒரே சந்திரனை ஒரே நாளில் படிபடியாக உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு, நாட்காட்டியாக மனாஜில்களாக தோற்றமளிக்கிறது என்பதனை குர் ஆனின் வசனங்களும் தெளிவாக்குகின்றன.
“”… இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா…” (47:24)
“”…. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா?….” (4:82)
என்ற வசனங்கள் படியே விஞ்ஞானிகள் ஆராய்ந்து குர்ஆனில் புதைந்து கிடக்கும் அறிவியலை வெளிக்கொண்டு வருகின்றனர்.
“”ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வீர்கள்…”
என்று அல்குர்ஆனின் வசனப்படியே இன்று வின்வெளிக்குச் செல்லும் விண்கலன்களை கண்டுபிடித்து பூமி என்ற நிலையிலிருந்து விண் வெளியில் உள்ள மற்றொரு நிலையான சந்திரனுக்கும், மற்ற கிரகங்களுக்கும் ஆராய்ந்து பார்க்கவே சென்று வரக்கூடிய நிலைப்பாட்டையும் கண்டுள்ளார்கள்.
அல்குர்ஆன் புதைந்து கிடக்கும் விஞ்ஞானத்தில் இதுவும் ஒரு சான்றாகும். இன்னும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம்.

-மண்டபம் M.அப்துல் காதிர்

DIPவுடன் இணையுங்கள்

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே

0 comments

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.


நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)


மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்! (குர்ஆன்11 :3)


 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக (தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…. ( அல்குர்ஆன் 66:8)


 அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கும் அதிகமாக அல்லாஹுத் தஆலாவிடம் பிழை பொறுத்திட வேண்டுகிறேன், அவனளவில் தவ்பாச் செய்து மீளுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


 மனிதர்களே! அல்லாஹுத் தஆலாவிடம் தவ்பாச் செய்யுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரே நாளில் நூறு முறை தவ்பாச் செய்கின்றேன் என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


 முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்தார்கள் என்றால்! ”நாம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்”? என்பதை எண்ணிப்பாருங்கள்.


சிறந்தவர் யார்?


 எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் , பாவத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. செய்த தவறுகளைவிட்டு தூரமாகி அவற்றிற்காக அல்லாஹ்விடத்திலிருந்து ”பாவமன்னிப்புப்” பெற வேண்டும். இதுதான் உண்மையான ஒரு நல்லடியானின் பண்பாகும். ஆகவே , நாம் செய்திருக்கும் பாவங்களுக்காக உடன் பாவமன்னிப்புத் தேடுவது மிக மிக அவசியமாகும். யார் தாங்கள் செய்த பாவங்களுக்காக உடனடியாக ”தவ்பா” செய்கின்றார்களோ அவர்களின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.


 அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் , அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்ததையவர்களுக்குத்தான் ஆகவே, அத்தகையோரின் ‘ தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)


 நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் நமது பாவங்களை மன்னிப்பதாகவும் வல்ல அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.


 தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையுற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்,நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டாலோ) பின்னர் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:53,54)


 உலகத்தில் நாம் யாருக்காவது தவறிழைத்து விட்டால் அவர்களைவிட்டும் ஒளிந்து தூரமாகி விடுகின்றோம். ஆனால், பாவம் செய்த தன் அடியார்களைப் பார்த்து அவனின் பக்கம் திரும்பி பாவமன்னிப்புத் தேடும்படி அந்த வல்ல அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான். இதைவிட தயாளத் தன்மை வேறு என்னதான் இருக்க முடியும்? தனக்கு மாறு செய்தவர்களை இறக்கத்தோடு அழைக்கின்றான். ஆகவே உங்களின் பாவங்களை உடன் நிறுத்திவிட்டு அவன் பக்கம் மீண்டு தவ்பாச் செய்யுங்கள்.


 இன்னும் பாவங்களை தொடரத்தான் போகின்றீர்களா? அல்லது இத்தோடு நிறுத்திக் கொண்டு தவ்பாச் செய்ய போகின்றீர்களா? ஆம்! உங்களை மரணம் வந்தடைவதற்கு முன்பாகவே, உடனடியாக அந்த ரஹ்மானிடம் உங்களின் தவறுகளுக்காக மனம் கலங்கி! கதறி! கண்ணீர் வடியுங்கள்! வல்ல அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவன். மீதியுள்ள காலத்தையாவது அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் வாழ்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் ஏவியவைகளையே செய்யுங்கள், அவ்விருவரும் தவிர்த்தவைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஈருலக வெற்றியாளர்கள்.


 அல்லாஹ்வின் திருப்திதான் மிகப் பெரியது, அதுதான் மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)


 மரண நேரத்தில் செய்யப்படும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது


 யார் இப்போதனைகளுக்குச் செவிமடுக்காமல், இவ்வுலக வாழ்க்கையை மாத்திரம் இலட்சியமாகக் கருதி, மறுமைக்காக எவ்வித அமல்களும் செய்யாமலும் தான் செய்த பாவங்களுக்காக தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவருக்கு அவர் சென்றடையப் போகும் நரகத்தைக் காட்டப்படும்.


அப்போது அவர் நல்அமல்கள் செய்வதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ அல்லாஹ்விடத்தில் அனுமதி வேண்டுவார், அதே போல் அவருடைய பாவங்களுக்காக மன்னிப்பும் கேட்பார் ; ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு வினாடி கூட கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.


 அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.


 அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)


 உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) ”என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (பரிதவிப்பான்) ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:10,11)


 இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ”நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே இல்லை, இத்தகையோருக்கு, துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)


 (மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


 மேலே கூறப்பட்ட இறைவசனங்களையும், நபிமொழிகளையும், கவனமாகப் படித்தீர்களா? மீண்டும் பல முறை படித்துப்பாருங்கள். அமல்களில்லாமலும், தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிப்பவர்கள் தங்களின் ”சக்ராத்” நிலையில் கதறக்கூடிய கதறலுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். எத்தனையோ நமது சகோதரர்கள் அவர்கள் மரணிக்கும் போது தாங்கள் உலகத்தில் செய்த தவறுகளைப்பற்றி கவலை அடைந்தவர்களாக அவர்களின் உயிர் பிரிந்ததை பார்த்திருக்கின்றீர்கள், கேள்விப்பட்டும் இருக்கின்றீர்கள். உங்களின் உயிரும் அப்படிப் பிரியக்கூடாது என்பதற்காக இப்போதனையை உங்கள் முன் எடுத்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!


 யார் உடனடியாக பாவமன்னிப்புத் தேடாமல் மரணம் வரும்வரை பிற்படுத்துகின்றார்களோ அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். மரணம் வரும் வரை தவ்பாவைப் பிற்படுத்துவதென்பது மரணத்தின் நேரம் முன்கூட்டியே தெரியும் என்பதல்ல. இன்று தவ்பாச் செய்வோம், நாளை தவ்பாச் செய்வோம் என்று தவ்பாவை யார் அலட்சியப் படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு திடீர் என மரணம் வரும்போது அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வார்கள் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதாகும். ஆகவே உடனடியாக தவ்பாச் செய்து கொள்ளுங்கள். காரணம் நாம் எப்போது மரணிப்போம் என்பது யாருக்குமே தெரியாது.


 பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகள்


 மனிதர்களின் உரிமைகள் சம்பந்தப்படாது, அல்லாஹ்வின் கட்டளைகள் விஷயத்தில் மாத்திரம் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் அவர் அதிலிருந்து தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும், மூன்று நிபந்தனைகள் உள்ளன.


 முதலாவது, தான் செய்து வந்த பாவத்தை விட்டு முற்றிலுமாக நீங்கி விடுவது.


இரண்டாவது, தமது பாவம் குறித்து உண்மையில் வருந்தி கைசேதப்படுவது.


மூன்றாவது, இனிமேல் ஒருபோதும் அப்பாவத்தைச் செய்வதேயில்லை என உறுதிகொள்வது.


 மனிதனுக்கு, மனிதன் செய்த குற்றமாயின் மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளுடன் நான்காவதொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது யாருக்கு நாம் அநியாயம் செய்தோமோ அவரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். உதாரணமாக பிறரது பொருளை அபகரித்திருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். பிறரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


 உண்மையான தவ்பா


 இப்படி செய்வதுதான் உண்மையான தவ்பாவாகும். இந்நிபந்தனைகளுக்கு உட்பட்டு யார் தவ்பாச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களின் தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும். அப்படி இல்லாமல் தான் சொல்வது தனக்கே புரியாமல் கேட்கப்படும் தவ்பா உண்மையான தவ்பா அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.


 தவ்பாச் செய்வதின் சிறப்புக்கள்


 தவ்பாச் செய்வதினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. அல்லாஹ் நம்மை நேசிக்கிறான். அவனுடன் நம்முடைய தொடர்பு அதிகரிக்கின்றது. அவனுடைய பொருத்தம் நமக்குக் கிடைக்கின்றது.


நிச்சயமாக பச்சாதப்பட்டு மீளுகின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222)


உங்களில், ஒருவரது வாகனம் அதில்தான் அவருடைய உணவும், குடிநீரும் உள்ளது;அது காணமால் போய் அவர் ஆதரவிழந்தவராக ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவ்வாகனம் அவர் முன் திடீரனெத் தோன்றினால் அவர் எவ்வளவு மகிழ்வடைவாரோ, அதனைவிட (பன்மடங்கு) அதிகமாக தன் அடியான் தன்னளவில் தவ்பாச் செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்வடைகிறான். அவர் தனது வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தவராக, இறைவா! நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று கூறிவிடுகிறார். அதிக மகிழ்ச்சியில் திளைத்ததால் நாவு தடுமாறி இவ்வாறு தவறாகக் கூறிவிடுகிறார். (இம்மனிதனின் மாபெரும் மகிழ்ச்சியைவிட பன் மடங்கு அதிகமாக தன் அடியான் தவ்பாச் செய்யும் போது அல்லாஹுத் தஆலா மகிழ்வடைகிறான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)


 மரணிப்பதற்கு முன் உண்மையான தவ்பா செய்து, பாவமற்றவர்களாக மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக.


தொகுப்பு: அபூஇப்ராஹீம்.


DIPவுடன் இணையுங்கள்

Tuesday, November 20

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்!

0 comments

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

'மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228)

என்கிறது அத்திருவசனம்.மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் 'இத்தா' இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.

''விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்'' (2:228)

என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘

ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்”

என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு.

அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத 'இத்தா' ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி

நன்றி – சமரசம்

DIPவுடன் இணையுங்கள்

Hadees (English)

0 comments

ஹதீஸ் (தமிழ்)

0 comments










Social Icons

Followers

Featured Posts


Related Posts Plugin for WordPress, Blogger...

Sample Text

Weather

Followers

 

Dinul Islam Paradise. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com