“துப்பாக்கி”திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுணம் ‘விஸ்வரூபம்’ எடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒருபகுதி. வெகு அன்மையில் அமெரிக்காவில் நாயகத்தை இழிவுபடுத்தும் ஒரு நாடகம் அரங்கேறியது, நேற்றுவரை இந்தியாவில் நடந்தது இன்றும் நடந்துள்ளது. நாமும் நமது மார்க்கமும் ஊடகங்களில் தாக்கப்படுவது இது புதிதல்ல.
படங்களில் முஸ்லிம்களை தாக்குவதும் தெரியாமல் இடம் பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் திரையுலகின்வேடிக்கை நிறைந்த வாடிக்கையான நடவடிக்கையாகிவிட்டது. பல ஆயிரம் நுணுக்கங்கள் பார்த்தும், இந்து சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தும் படம் எடுக்கும் இவர்கள், இஸ்லாம், முஸ்லிம் உலகம் பற்றிய எதார்த்தங்களைமறந்தது ஏன்? அதுபற்றி தெரியாமல் போனது எப்படி? இது அபத்தம், முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் முயற்சி. இவர்களின் திட்டமிட்ட செயல். இழிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை.
இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து, சிறப்பாய் நடித்து, வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி, தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி, தலைவர்களாக்கி, உலக நாயகர்களாக்கி, கலாநிதிப் பட்டம் கொடுத்துக் கெளரவித்து, அவர்களின் கட்அவுட்டுகளுக்கு தன் சொந்தப் பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் அறிவு ஜீவிகள் நிறைந்த நாடு இந்தியா.
இந்த மக்களிடத்தில் தன் தொழிலில் இலகுவாக இலாபம் ஈட்ட தன் வேஷ நாடகத்தை இலவசமாக விளம்பரப்படுத்த இழிவான மிகவும் கேவலமான தரங்கெட்ட பல வழிகளை திரையுலகினர் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கும் சதைக்கும் நல்ல வரவேற்ப்புக் கிடைக்கும் என்பதனாலும் முஸ்லிம்கள் எதிர்த்தால் இலவச விளம்பரமும் கிடைக்கும் என்பதனாலும் இந்த வியாபார யுக்தியை தொடர்ந்து இந்தக் கூத்தாடிக் கூட்டம் செய்துவருகின்றது. குறிப்பாக இதைக் கூத்தாடிகளான கமல(காம )ஹாஷன், குடிகாரன் விஜயகாந்த், அறிவுகட்ட அர்ஜூன், மன்னகட்டி மணிரத்தினம் தொடக்கம் பலர் தொடர்ந்து தன் படங்களில் செய்து வருகின்றனர். இதில் இன்று ஜெராக்ஸ் விஜய், மூலகட்ட முருகதாஸ் எனும் கூத்தாடிக் கூட்டம் புதிதாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்.
.இந்திய ராணுவம் காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் மூலகட்ட முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் ஜெராக்ஸ் விஜய் சம்மதிப்பாரா?
நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.
அறிவுகட்ட அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.
உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.
எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண துருப்பிடித்த மசாலா படமே.
நீங்கள் இன்னும் கொலைகாரன் கோட்சேயை ஹீரோவாக்கி, காந்தியை வில்லனாக்கி 'ஹேராம்' அல்லவா எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இதற்கு வெட்கப்பட வேண்டாமா நீங்கள்..? இதுதான் உங்கள் தேசபக்தியின் நிறமா..? மெய்யான நடிப்பல்லவா இது..!
விஜயகாந்த், அர்ஜுன், மணிரத்தினம் போன்றாராவது பெரும்பாலும் பாகிஸ்தான் முஸ்லீம்களைத்தான்... பயங்கரவாதிகளாக திரித்தனர்..!ஆனால்... கமலும் விஜயும்... நம் எதிர்வீடு... அடுத்தவீடு... பக்கத்து வீட்டு சகோதரனை அல்லவா பயங்கரவாதியாக காட்டுகிறார்கள்..? இது அராஜக அக்கிரம அநியாயம் அல்லவா...? இதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்..!
முண்டியடித்து முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் முஸ்லிம்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு காத்தாடிகள் போல் செயற்படும் ரசிகர் மன்றங்களில் எம் முஸ்லிம்கள் இருக்கும் வரை அவர்களின் வியாபார வெற்றியில் ஒரு முடியளவு நஷ்டதைக் கூட எம்மால் ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.
சத்தியம் வந்ததுஅசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81
எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
DIPவுடன் இணையுங்கள்
0 comments:
Post a Comment