Saturday, December 29

சீர்கெடும் சட்டம் ஒழுங்கு... இஸ்லாமிய சரியத் சட்டதை களமிறங்க வேண்டிய நேரம் இது!

0 comments
டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

இதை வைத்து அரசியல் செய்யும் வேலைகளை காவி பாஜக கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. ஆனால், இது அரசியலுக்கான நேரமல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த நாட்டில் பெண்களை எந்த அச்சமும் இல்லாமல் பாலியல் கொடுமை செய்வதும், அது தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகள் எளிதாக தப்பிவிடுவதும் மிகச் சாதாரணாக நடந்து கொண்டுள்ளது.
இதற்கு மிக முக்கியக் காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், காவல்துறையினரின் அலட்சியமும், வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர்கள் காட்டும் மெத்தனமும் தான். பாலியல் பலாத்காரங்கள் காலம் காலமாக நடந்தாலும் டெல்லி பெண்ணுக்கு நேர்ந்த அவலம் நாட்டின் இதயத்தை ஒட்டுமொத்தமாக பதம் பார்த்துள்ளது. மக்கள் கலங்கிப் போயுள்ளனர். பலாத்காரத்துக்கு எதிராக சமூகத்தில் கடும் கோபமும் கொந்தளிப்பும் உருவாகியுள்ளது.
இந்த கொடுமையான சம்பவத்தின் பின்னணியில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த தேசத்தின் கோபத்தை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பாலியல் கொடுமைகளுக்கு மிக அதிகபட்ச தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டியது ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளின் கடமை. ஏதோ மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் தான் கற்பழிப்புகள் நடந்துள்ளது போல காவி பாஜக டிராமா போட்டு இதிலும் அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்வதால் பலனில்லை.
ஆளும் கட்சியை நெருக்கி மிகக் கடுமையான தண்டனையைக் கொண்டு வர வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கும் உண்டு. அதே போல எல்லா பிரச்சனைகளைப் போல இதையும் கிடப்பில் போட்டுவிட்டு, அப்பாடா மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நிம்மதி தேடும் படலதத்தை சோனியா காந்தி உடனடியாக நிறுத்திவிட்டு, தானே முன் வந்து மிகக் கடுமையான சட்டத் திருத்தத்துக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியதும் மிக அவசியம்.
இந்த விஷயத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்களைப் பற்றி யாரும் கவலைப்படவும் கூடாது. உலகிலேயே மிகப் பெரிய மனித உரிமை மீறல் பாலியல் கொடுமை தான். இதனால் இதில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை என்பது மிக மிகப் பொறுத்தமானதே.

சீர்கெடும் சட்டம் ஒழுங்கு... இஸ்லாமிய சரியத் சட்டதை களமிறங்க வேண்டிய நேரம் இது!

Tuesday, December 25

இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே திர்வு இஸ்லாம்தான்!

0 comments

இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே  திர்வு இஸ்லாம்தான்!

இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் நடைபெறுவது  அரிதான ஒன்றல்ல, தினமும் இந்தியாவின் எதோ ஒரு பகுதியிலாவது பெண்கள் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றார்கள். தலைநகர் புதி தில்லியில் மட்டும் கடந்த ஆண்டு 568 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 24, 000 பாலியல் வன்புணர்வுகள் நடந்துள்ளது ( பதிவு செய்யப்பட்டவை ). அவற்றில் வெறும் 27 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனைக் கிட்டியுள்ளது.

யார் யார் எல்லாம் பாதிக்கப்படுகின்றார்கள்: மணமாகாத இளம் பெண்கள், நவநாகரிக உடையணியும் பெண்கள் மட்டுமா பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுகின்றார்கள் என நினைக்கின்றீர்கள், இல்லவே இல்லை அன்றாட செய்திகளைக் கவனித்தோமானால் ஒரு வயது பச்சிளம் குழந்தைகள் முதல் அறுபது வயது மூதாட்டி வரை, சொந்த மகள்கள், சொந்த சகோதரிகள், பக்கத்து வீட்டுப் பெண்கள், மனநலம் குன்றிய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் என எவரையும் இந்த காமவெறி ஆணாதிக்க விலங்குகள் விடுவதில்லை. உதிரப் போக்கு உடைய பெண்ணைக் கூட வன்புணரும் கேடு கெட்டவர்களே இந்திய ஆண்கள் என்ற நிலையை எட்டி விட்டோம்.

நமது புண்ணாக்கு தேசத்தில் கற்பழிப்பு சம்பந்தமாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை கற்பழிப்பு என்பது ஒரு பொதுவான குற்ற செயல் ஆகிவிட்டதாம், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திர்க்கு ஒரு பெண் கற்பழிக்கவோ அல்லது கற்பழித்து கொல்லபடுகிறாள் என்கிறது ஒரு ஆய்வு. இன்னும் ஒரு படி மேல இந்தியாவில் 25% பெண்கள் 15 வயதிர்க்கு முன்பே இறந்து விடுகிறார்களாம்,  அதில் அதிகமானோர் கற்பழித்து கொலை செய்ய படுகிறார்களாம். 1971 முதல் இந்தியாவில் கற்பழிப்பு 700% வளர்ந்துள்ளதாம் (ஒ இதைதான் இந்தியா 2020-இல் வல்லரசு ஆகிவிடும் என்கிறார்களா), 2001 ஆம் ஆண்டில் மட்டும் 26,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். மேலும் அதே ஆண்டு பதிவான 256,329குற்றங்களில் 228,650 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ( இந்திய நாட்டை கூட இந்தியர்கள் பெண்ணாக தான் பார்க்கிறார்கள்). மேலும் இந்த கற்பழிப்புகள் அதிகமா தாழ்த்தப்பட்ட வர்காத்தினர் மீதே அதிகமாக செய்யபடுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வல்லரசு கனவை கூறிவிட்டு,அந்த வலைத்தளம் இந்தியாவில் இது வரை நடைபெற்ற கற்பழிப்புகளை பற்றி ஒரு பட்டியலிடுகிறது:-

1.   1973 –ஆம் ஆண்டு அருணா ஷன்பௌக் என்கின்ற நர்ஸ் வேலை செய்த ஒரு பெண் அதே மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவரால் ஆண்டு கற்பழிப்பட்டார், ஆனால் இந்த கேஸ் 2011 ஆம் ஆண்டுதான் தீர்பளிக்கப்பட்டது. அதுவும் வெறும் 7 ஆண்டு சிறைத்தண்டனை. ஆனால் அந்த பெண்ணிர்க்கோ இதன் மூலம் பார்வை பறிபோனது, சுவாச மண்டலம் பாதிப்படைந்ததான் மிச்சம்.
2.   1974 ஆம் ஆண்டு 16 வயது பெண் ஒருத்தி இரண்டு போலீஸ்காரர்களால் போலீஸ் நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்டால். ஆனால் நீதிமன்றம் அவளை அந்த வழக்கில் விபச்சாரீ என்றும், உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்தது.
3.   1991 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குனன் புஷ்போரா என்கின்ற கிராமத்தில் இந்தியா ராணுவம் கிட்டதட்ட 100 பெண்களை கற்பழித்தார்கள், இதில் கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் மற்றும் கற்பிணியை கூட விட்டு வைக்கவில்லை. இவை அனைத்தும் கும்பலாக செய்தார்கள்.
4.   1992 ஆம் ஆண்டு அஜ்மீரில் பண்வரி தேவி என்கின்ற பெண்மணி, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டால், அவர்கள் அவளுடைய கணவனை அடித்து போட்டுவிடு இந்த தீய செயலை செய்தார்கள்.
5.   அதே 1992 ஆம் ஆண்டு, நம்ம தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வச்சாத்தி என்கின்ற கிராமத்தில் வனத்துறைனரும், காவல்துறையினரும் சேர்ந்து 18 பெண்களின் கற்புக்களை சூறையாடினர். ஆனால் இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு தான் தீற்பழிக்கப்பட்டது, இதில் மொத்தம் 215 பேர்களுக்கு சிறை தண்டனை வழக்கப்பட்டது.
6.   1996 ஆம் ஆண்டு, சூர்யாநெல்லி இடுக்கியை சேர்ந்த 16 வயது பெண் தொடர்ந்து 40 நாட்கள் 42 பேர்களால் கற்பழிக்கப்பட்டால். இதர்க்கும் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை.
7.   1999 ஆம் ஆண்டு, அஞ்சனா மிஷ்ரா அங்கீன்ற ஒரிஸ்ஸாவை சார்ந்த பெண் தன்னுடைய தோழி ஒருத்தியுடன் போகும் பொழுது 3 பேர்களால் தடுக்கப்பட்டு தன்னுடைய தோழியின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டால்.
8.   2004 ஆம் ஆண்டு தங்கஜம் மனோரமா, என்கின்ற பெண்மணி 17 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டால். அந்த 17 பேர்களும் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.
9.   2005 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சரி எஸ் நாயர் என்ற பெண் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி 6 நபர்களால் கற்பழிப்பட்டால். இதில் இவளை இது போல செய்ததற்க்கு முக்கிய காரணம் லதா நாயர்  என்கின்ற பெண்மணிதான்.
10.  அதே 2005 ஆம் இம்ரான என்கின்ற பெண்மணி தன்னுடைய மாமனாறினாலேயே கற்பழிக்கபடுகிறாள். இதர்க்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கபடவில்லை.

இங்கே மேல குறிப்பிட்டது மட்டுமில்லாமல் இந்தியாவில் இன்னும் ஏறலாமான கர்ப்ழிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது,அதுமட்டுமில்லாத மேலே உள்ள எந்த ஒரு கற்பழிப்பீர்க்கு மரணதண்டனை விதிக்கவில்லை, பெண்களை புனிதமாக பார்க்கும் இந்த இந்திய திருநாட்டில் இந்த தெருநாய்களை இப்படி விட்டால், 2020 இல்லை, உலகம் அழியும் வரை இந்தியா வல்லரசில்லை, ஒரு புள்ளை புடுங்க கூட லாய்க்கில்லாமல் போய்விடும்.

ஒவ்வொரு முறையும் எதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அரசியல் வாதிகள் அறிக்கை விடுவார்கள், மாதர் சங்கங்ககள் போராட்டம் செய்வார்கள், நீதிமன்றம் விசாரணைக் கமிசன்கள் வைப்பார்கள், கலாச்சாரக் காவலர்களோ பெண்ணின் உடை முதல் உணவு வரை தான் காரணம் எனக் கூறி அலம்புவார்கள்.  பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி என்பது கானல் நீரே ஆகும்.

இதர்க்கெல்லாம் ஒரே  திர்வு , இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள்தான்!

ஒருத்தன் திருடுறானா? கைய்ய வெட்டு, ஒருத்தன் கொலை செய்கிறானா?தூக்கில் போடு (கொலையானவனுடைய உறவினர்கள் மன்னித்தால் அவனை மன்னித்துவிடு), நான் ஒன்றும் உங்களை முழுவதுமாக இஸ்லாத்திர்க்கு வார சொல்லவில்லை, குறைந்தது உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துங்கள்,மிருகத்தை விட கேவலமான இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து தூக்கிலிடுங்கள், இல்லை மக்களிடத்தில் விட்டுவிட்டு இவர்கள்தான் என்று கூறிவிட்டு சென்று விடுங்கள், மாற்றத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மேலும் இறைவன் தான் திருமறையில் கூறிகின்றான்:- -

நபியே நீர் மூமீனான ஆண்களுக்கு கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும், அது அவர்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம், அது மாநாகேடனாதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

ஆண்களும் பெண்களும் எப்படி காட்டுபாட்டுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல், இதற்க்கு ஒரு மாத சாயம் பூசாமல், ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால்,குறைந்தது 2050 இல் ஆவது இந்தியா நல்லரசு  ஆக வாய்ப்புள்ளது.

reference
youtube.com
Tamilquran

Tuesday, December 18

ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்

0 comments


ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்
காலம் கடந்து செல்லச் செல்ல, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அல்குர்ஆனின் நம்பகத் தன்மையும், அது இறைவனின் வார்த்தைகள் தான் என்ற அசைக்க முடியாத உண்மையும் மேலோங்கிக் கொண்டே போகின்றது.
அல்லாஹ் தன் வார்த்தையான அல்குர்ஆனில் குறைந்து கொண்டு வரும் பூமியின் நிலப்பரப்பைப் பற்றி பேசுகின்றான்.
பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன். 
(அல்குர்ஆன் 13:41)
அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (அல்குர்ஆன் 21:44)
பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த அறிவியல் உண்மையை நவீன விஞ்ஞானம் எவ்வாறு ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
இது பற்றிய நவீன விஞ்ஞான ஆராய்ச்சி.
பூமி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது.
1. மேற்பரப்பு (Crust)
2. Mantle
3. வெளி மையம் (Outer Core)
4. உள் மையம் (Inner Core)
பூமி அதன் ஓரப் பகுதிகளில் குறைவடைதலுடன் டெக்டோனிக் அடுக்குகள் (Tectonic plates) என்பவையே சம்பந்தப்படுகின்றன. முதலில் டெக்டோனிக் அடுக்குகள் (Tectonic plates) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (Tectonic plates)
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்பது நிலவியல் கோட்பாடுகளில் ஒன்று. இக் கோட்பாடு கண்டப் பெயர்ச்சித் தோற்றப்பாட்டை விளக்குவதற்கு எழுந்த கோட்பாடேயாகும். பூமியிலுள்ள கண்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்புடன் நகர்வது கண்டப்பெயர்ச்சி ஆகும்.
இக்கருதுகோள் முதன்முதலில் 1596ம் ஆண்டில் Abraham Ortelius என்ற புவியியலாளரால் முன்மொழியப்பட்டு பின் 1912ம் ஆண்டில் பூகோள,வானியலுடன் சம்பந்தப்பட்ட விஞ்ஞானியான Alfred Wegener என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது. பின்னர் 1960ம் ஆண்டில் தக்க நிலவியல் சான்றுகளுடன் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்ற கோட்பாட்டுடன் நகர்தலுக்கான காரணமும் கண்டறியப்பட்டது. தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாட்டின் படி பூமியின் உட்பகுதி வெளிக் கற்கோளம் (lithosphere), மற்றும் உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) ஆகிய இரண்டு படைகளால் ஆனது.
கற்கோளம் மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டு இருப்பதுடன் பத்து தட்டுகளாகப் பிரிந்தும் உள்ளது. இவை ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,யுரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசுபிக், கோகோஸ், நாஸ்கா மற்றும் இந்தியத் தட்டுக்கள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. மேற்கூறிய தட்டுகளும், மேலும் பல சிறிய தட்டுகளும் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று என தட்டு எல்லைகளில் நகர்கின்றன. தட்டுக்கள் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று நகர்கின்ற விதத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டு எல்லைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன.
அவை:
1.ஒருங்கும் தட்டு எல்லை (எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு இருத்தல்)
இங்கு புவி மேற்பரப்பு சீர்குழைக்கப்பட்டு ஒரு தட்டு மறு தட்டுக்குக் கீழாக மறு சீரமைக்கப்படுகின்றது. இவை உள்ளிழுத்தல் மண்டலங்கள் (subduction zones) என்று அழைக்கப்படுகின்றன. தட்டுக்கள் ஒருங்குதலாகும் போது பெரும்பாலும் மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. மூன்று வகையான ஒருங்கும் தட்டு எல்லைகள் காணப்படுகின்றன.
1. சமுத்திர – கண்ட ஒருங்குதல் தட்டு எல்லை.
2. சமுத்திர – சமுத்திர ஒருங்குதல் தட்டு எல்லை.
3.கண்ட – கண்ட ஒருங்குதல் தட்டு எல்லை.
2விலகும் தட்டு எல்லை (தட்டுக்கள் ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்)
விலகும் தட்டு எல்லைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் ஒன்றையொன்று இழுப்பதுபோல் புதிய புவி மேற்பரப்பு உருவாக்கப்படும். சமுத்திரங்கள் விசாலமாவதற்கான காரணம் தட்டுக்கள் விலகுதலேயாகும். கீழுள்ள படத்தில் உள்ளவாறு விலகும் தட்டு எல்லையின் போது பிளவு ஏற்பட்டு அல்லது பெரிய நிலப்பரப்பு பிளவாகி வேறுபட்டு அதனை சுற்றியுள்ள இடைவெளி நீரால் நிரப்பப்படும். இதற்கு உதாரணம் ஐஸ்லாந்து.
3.உருமாறும் தட்டு எல்லை (இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லுதல்) என்பனவாகும்.
இரண்டு தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று கிடைத்தளமாக சரிந்து செல்லுதலே உருமாறும் தட்டு எல்லையாகும். பெரும்பாலான உருமாறும் தட்டு எல்லைகள் கடற் தளங்களிலேயே காணப்படுகின்றன. பொதுவாக முகடுகளில் பரவி தட்டுகளில் zig zag வடிவ ஓரங்களை உருவாக்கி சிறிய பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடியன.
நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே எற்படுகின்றன.
புவியின் உட்பகுதி அதன் பொறிமுறை வேறுபாடுகளுக்கு அமையவே கற்கோளம் (lithosphere), மென்பாறைக்கோளம் (asthenosphere) எனப் பிரிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் கற்கோளம் குளிர்ந்தும், உறுதியானதுமாகும். ஆனால் மென்பாறைக்கோளம் சூடானதாகவும், பொறிமுறைப் பலம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது.
தட்டுப் புவிப்பொறைக் கோட்பாட்டின் மிக முக்கியமான கொள்கை கற்கோளம் வெவ்வேறான புவிப்பொறைத் தட்டுகளாக திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கிறது என்பதாகும். இடத்துக்கிடம் வேறுபட்ட திரவத் தன்மையுடன் இருக்கும் இந்த மென்பாறைக்கோளம் அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் புவிப்பொறைத் தட்டுக்களை வெவ்வேறு திசைகளில் நகரச் செய்கிறது.
இரு தட்டுகள் ஒன்றையொன்று அவற்றின் பொதுத் தட்டு எல்லையில் சந்திக்கின்றன. இத் தட்டு எல்லைகள் பொதுவாக பூமியதிர்ச்சி மற்றும் மலைகள் உருவாக்கம் போன்ற நில உருவவியலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான உயிர்ப்புள்ள எரிமலைகள் தட்டு எல்லைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் பசுபிக் தட்டின் ‘தீ வளையம்’மிக உயிர்ப்புள்ளதும், பிரபல்யமானதுமாகும்.
புவிப்பொறைத் தட்டுக்கள் இரண்டு விதமான கற்கோளங்கனைக் கொண்டவை. அவை கண்டம் சார்ந்த (continental crust) மற்றும் கடல் சார்ந்த (oceanic crust) கற்கோளங்களாகும். உதாரணமாக, ஆபிரிக்கத் தட்டு ஆபிரிக்கா கண்டத்தையும், அத்திலாந்திக் மற்றும் இந்து சமுத்திர கடற் பகுதிகளின் தரைகளையும் உள்ளடக்குகின்றது. இந்த வேறுபாடு இப் பகுதிகளை உருவாக்கியுள்ள பதார்த்தங்களின் அடர்த்திகளை அடிப்படையாகக் கொண்டது. கடல் சார்ந்த கற்கோளம், கண்டம் சார்ந்த கற்கோளத்திலும் அடர்த்தி கூடியதாகும். இதன் விளைவாகவே கடல் சார்ந்த கற்கோளங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்திற்கு கீழேயே காணப்பட கண்டம் சார்ந்த கற்கோளங்கள் கடல் மட்டத்திற்கு மேலே காணப்படுகின்றது.
கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள நான்கு பூலோக மாதிரிப் படங்களில் மேலுள்ள இடது பூலோகத்தில் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் ஒரு தனி நிலப்பரப்பாக இருந்தமையைக் காட்டுகின்றது. கீழுள்ள இடது பூகோள படமானது 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்பு சற்று பிளவுபட்டு காணப்படுகின்றது. மேலும் மேலே வலது புறத்திலுள்ள 50 மில்லியன் வருடங்களுக்கு முன்புள்ள பூகோளத்தில் மேலதிகமாக பூமியின் நிலப்பரப்பு பிளவுபட்டு ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றது. கடைசியாக கீழ் வலது புறத்திலுள்ள பூகோள படமானது பூமியின் இன்றைய நிலையைக் காட்டுகின்றது. அதாவது பூமி இன்று தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டின் மூலம் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் (பூகம்பம், எரிமலை, நிலப்பரப்பு பிளவுபட்டு அவ்விடம் கடல் நீரால் நிரப்பப்படுதல்) பூமியின் அதன் ஓரப் பகுதிகளில் குறைந்து கொண்டு வருகின்றது.
இம் மாபெரும் அறிவியல் உண்மையை படிப்பறிவே இல்லாத, அறிவியல் சிந்தனைக்கு எந்த வழியும் இல்லாத காலப்பகுதியல் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வாய்ப்பே இல்லை. இவ் வகையான அறிவியல் உண்மைகளை ஆராய்ச்சியின் மூலம் அல்லாது எந்த ஒரு மனிதனாலும் எக்கால கட்டத்திலும் சாதாரணமாக கூறிட விட முடியாது. மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பூமி அதன் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றது என்று மேற் குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடாமல் பூமி அதன் ஓரப் பகுதிகளில் குறைந்து வருகின்றது என மிகவும் நுணுக்கமாக இந்த அறிவியல் உண்மையைக் குறிப்பிடுகின்றான்.
எனவே, 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையாக மேலுள்ள அல்குர்ஆன் வசனங்கள் இருக்க முடியாது. அவை இவ் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனின் வார்த்தைகளே தவிர வேறில்லை.
-http://www.sltjweb.com

Friday, December 14

நீருக்குள் பிரசவம்

0 comments
நீருக்குள் பிரசவம்

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
திருக்குர்ஆன் 19:23.24

பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து குர் ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மேலும் மெய்பித்திருக்கிறது.

பிரசவ வேதனை என்பது ஒரு பெண்ணை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்லும். அந்த நேரத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு வேதனையை அந்த பெண் உணர்வாள். 
மனித உடலின் வலியை அளக்கும் அலகு டெல் ஆகும். மனித உடல் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவு 45 டெல் (del). ஆனால், பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு 57 டெல் வரை வலி அதிகமாகும். இவ் வலி 20 இடங்களில் என்பு முறிந்தால் ஏற்படும் வலிக்கு சமனாகும். ஒரு மனிதனால் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவை விட அதிக வலியை ஒரு பெண் தன் பிரசவ வேதனையில் உணர்கிறாள்.
மேலுள்ள அல்குர்ஆன் வசனம் பிரசவ வேதனையை குறைக்கக்கூடிய ஒரு வழிமுறையை கற்றுத் தருகின்றது.


மர்யம் (அலை) பிரசவ வேதனையால் ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று கூறிய சமயத்தில் ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். இதிலிருந்து அவரது வேதனையைக் குறைப்பதற்கே ஊற்று ஏற்படுத்தப்பட்டது எனத் தெளிவாகின்றது. நீருக்கு பிரசவ வேதனையை குறைக்கும் தன்மை உள்ளது என்பது இதிலிருந்து புலனாகின்றது.
நீருக்குள் பிரசவம்
நீருக்குள் பிரசவம் என்பது வெதுவெதுப்பான நீர் தொட்டிக்குள் குழந்தையை பிரசவிக்கும் முறையாகும். இதன் கோட்பாடு குழந்தை தாயின் கருவறையில் அம்னியன் திரவப் பையில்(amniotic fluid sac) இருந்து தனக்கு ஒத்த சூழலான தண்ணீருக்குள் பிரசவிக்கும் போது குழந்தை இலகுவான முறையில் பிரசவிக்கப்படும். தாய்க்கும் மன அழுத்தம் குறைவாக இருக்கும். நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாயின் மன அழுத்தமும், பிரசவ வேதனையும் குறைகின்றன என் அறியப்பட்டுள்ளது.

நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் 
•    இளம் சூடான நீர் வலியைக் குறைக்கக்கூடியதாகவும், இதமானதாகவும் இருக்கும்.
•    பிரசவத்தின் இறுதிக் கட்டத்தில் நீரானது அத்தாய்க்கு ஒரு ஆற்றலைக் கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
•    இந்த மிதப்பின் விளைவானது தாயின் அங்க அசைவுகளுக்கு இலகுவாகவும், தாயின் உடல் எடையைக் குறைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
•    நீரில் மிதக்கும் தன்மை கருப்பை தசைகளின் சுருக்கத்திற்கும், ஒக்ஸிஜனைக் கொண்ட இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கின்றது. இதனால் தாய்க்கு வலி குறைகின்றது. குழந்தைக்கும் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது.
•    நீரில் அமிழ்ந்திருப்பதால் பதட்டம் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் குறைகின்றது.
•    நீரானது மன அழுத்தம் தொடர்பான ஹோர்மோன்கள்(hormones) உருவாகுவதைக் குறைத்து எண்டோர்பின் (endorphins) எனும் வலி தடுப்பான்கள் உருவாக இடமளிக்கும்.
•    நீரானது குழந்தை வெளியேறும் அப்பகுதிக்கு மீள் தன்மையையும், இலகுவையும் கொடுத்து தையல் தேவையை குறைக்கின்றது.
•    உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நீரானது தாய்க்கு மன அமைதியைக் கொடுக்கும்.
•    இம் முறை மூலம்; பதட்டம், அச்சம் குறைவடைகின்றது.
நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
•    கருப்பையிலுள்ள அம்னியன் பைக்கு ஒத்த சூழலை நீர் வழங்குகின்றது.
•    நீரானது குழந்தை பிரசவிக்கும்; போது பிரசவத்தை எளிதாக்கி குழந்தையின் மன அழுத்தத்தைக் குறைத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.
மேலுள்ள அத்தனை தகவல்களும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டவை. 1970 இல் ரஷ்யா மற்றும் பிரான்சில் சில தாதிகளும், மருத்துவர்களும் குழந்தை கருப்பையிலிருந்து சுமுகமான முறையில் வெளி உலகுக்கு வருவதற்கு நீருக்குள் பிரசவ முறைக்கு ஆர்வம் காட்டினர். அவர்கள் பெண்கள் பிரசவ வேதனையால் துடிப்பது குறித்து கவலையடைந்தனர். இன்று ஐக்கிய இராட்சியம் உட்பட அநேக ஐரோப்பிய நாடுகளில் இந்த நீர் தொட்டியில் பிரசவ முறை கையாளப்படுகின்றது.
அல்குர்ஆனே நீருக்குள் பிரசவ முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது
விஞ்ஞான தகவல்களின் மூலம் முதன்முதலில் நீருக்குள் பிரசவ முறை 1970 களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1400 வருடங்களுக்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆனில் நீருக்குள் பிரசவ முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தறிவே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் விஞ்ஞான அறிவு என்பது பூச்சியமே. எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்லாமல் வேறில்லை என்பது அல்குர்ஆனை படிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியாமல் போகாது.


reference: 

எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

DIPவுடன் இணையுங்கள்
Facebook.com/groups/dinulislamparadise


Download the Qur'an in PDF from over 50 languages

0 comments

Download the Qur'an in PDF from over 50 languages 

Wednesday, December 12

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

0 comments
ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.  
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  
மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?  
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.  
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.  
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை  
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  
பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.  
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.  
பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
கிரெடிட் கார்டு!
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.  
தகவல்கள்:விகடன்

Social Icons

Followers

Featured Posts


Related Posts Plugin for WordPress, Blogger...

Sample Text

Weather

Followers

 

Dinul Islam Paradise. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com