இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே திர்வு இஸ்லாம்தான்!
இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் நடைபெறுவது அரிதான ஒன்றல்ல, தினமும் இந்தியாவின் எதோ ஒரு பகுதியிலாவது பெண்கள் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றார்கள். தலைநகர் புதி தில்லியில் மட்டும் கடந்த ஆண்டு 568 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 24, 000 பாலியல் வன்புணர்வுகள் நடந்துள்ளது ( பதிவு செய்யப்பட்டவை ). அவற்றில் வெறும் 27 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனைக் கிட்டியுள்ளது.
யார் யார் எல்லாம் பாதிக்கப்படுகின்றார்கள்: மணமாகாத இளம் பெண்கள், நவநாகரிக உடையணியும் பெண்கள் மட்டுமா பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுகின்றார்கள் என நினைக்கின்றீர்கள், இல்லவே இல்லை அன்றாட செய்திகளைக் கவனித்தோமானால் ஒரு வயது பச்சிளம் குழந்தைகள் முதல் அறுபது வயது மூதாட்டி வரை, சொந்த மகள்கள், சொந்த சகோதரிகள், பக்கத்து வீட்டுப் பெண்கள், மனநலம் குன்றிய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் என எவரையும் இந்த காமவெறி ஆணாதிக்க விலங்குகள் விடுவதில்லை. உதிரப் போக்கு உடைய பெண்ணைக் கூட வன்புணரும் கேடு கெட்டவர்களே இந்திய ஆண்கள் என்ற நிலையை எட்டி விட்டோம்.
நமது புண்ணாக்கு தேசத்தில் கற்பழிப்பு சம்பந்தமாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பதை பார்ப்போம்.
இந்தியாவை பொறுத்தவரை கற்பழிப்பு என்பது ஒரு பொதுவான குற்ற செயல் ஆகிவிட்டதாம், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திர்க்கு ஒரு பெண் கற்பழிக்கவோ அல்லது கற்பழித்து கொல்லபடுகிறாள் என்கிறது ஒரு ஆய்வு. இன்னும் ஒரு படி மேல இந்தியாவில் 25% பெண்கள் 15 வயதிர்க்கு முன்பே இறந்து விடுகிறார்களாம், அதில் அதிகமானோர் கற்பழித்து கொலை செய்ய படுகிறார்களாம். 1971 முதல் இந்தியாவில் கற்பழிப்பு 700% வளர்ந்துள்ளதாம் (ஒ இதைதான் இந்தியா 2020-இல் வல்லரசு ஆகிவிடும் என்கிறார்களா), 2001 ஆம் ஆண்டில் மட்டும் 26,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். மேலும் அதே ஆண்டு பதிவான 256,329குற்றங்களில் 228,650 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ( இந்திய நாட்டை கூட இந்தியர்கள் பெண்ணாக தான் பார்க்கிறார்கள்). மேலும் இந்த கற்பழிப்புகள் அதிகமா தாழ்த்தப்பட்ட வர்காத்தினர் மீதே அதிகமாக செய்யபடுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வல்லரசு கனவை கூறிவிட்டு,அந்த வலைத்தளம் இந்தியாவில் இது வரை நடைபெற்ற கற்பழிப்புகளை பற்றி ஒரு பட்டியலிடுகிறது:-
1. 1973 –ஆம் ஆண்டு அருணா ஷன்பௌக் என்கின்ற நர்ஸ் வேலை செய்த ஒரு பெண் அதே மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவரால் ஆண்டு கற்பழிப்பட்டார், ஆனால் இந்த கேஸ் 2011 ஆம் ஆண்டுதான் தீர்பளிக்கப்பட்டது. அதுவும் வெறும் 7 ஆண்டு சிறைத்தண்டனை. ஆனால் அந்த பெண்ணிர்க்கோ இதன் மூலம் பார்வை பறிபோனது, சுவாச மண்டலம் பாதிப்படைந்ததான் மிச்சம்.
2. 1974 ஆம் ஆண்டு 16 வயது பெண் ஒருத்தி இரண்டு போலீஸ்காரர்களால் போலீஸ் நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்டால். ஆனால் நீதிமன்றம் அவளை அந்த வழக்கில் விபச்சாரீ என்றும், உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்தது.
3. 1991 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குனன் புஷ்போரா என்கின்ற கிராமத்தில் இந்தியா ராணுவம் கிட்டதட்ட 100 பெண்களை கற்பழித்தார்கள், இதில் கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் மற்றும் கற்பிணியை கூட விட்டு வைக்கவில்லை. இவை அனைத்தும் கும்பலாக செய்தார்கள்.
4. 1992 ஆம் ஆண்டு அஜ்மீரில் பண்வரி தேவி என்கின்ற பெண்மணி, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டால், அவர்கள் அவளுடைய கணவனை அடித்து போட்டுவிடு இந்த தீய செயலை செய்தார்கள்.
5. அதே 1992 ஆம் ஆண்டு, நம்ம தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வச்சாத்தி என்கின்ற கிராமத்தில் வனத்துறைனரும், காவல்துறையினரும் சேர்ந்து 18 பெண்களின் கற்புக்களை சூறையாடினர். ஆனால் இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு தான் தீற்பழிக்கப்பட்டது, இதில் மொத்தம் 215 பேர்களுக்கு சிறை தண்டனை வழக்கப்பட்டது.
6. 1996 ஆம் ஆண்டு, சூர்யாநெல்லி இடுக்கியை சேர்ந்த 16 வயது பெண் தொடர்ந்து 40 நாட்கள் 42 பேர்களால் கற்பழிக்கப்பட்டால். இதர்க்கும் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை.
7. 1999 ஆம் ஆண்டு, அஞ்சனா மிஷ்ரா அங்கீன்ற ஒரிஸ்ஸாவை சார்ந்த பெண் தன்னுடைய தோழி ஒருத்தியுடன் போகும் பொழுது 3 பேர்களால் தடுக்கப்பட்டு தன்னுடைய தோழியின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டால்.
8. 2004 ஆம் ஆண்டு தங்கஜம் மனோரமா, என்கின்ற பெண்மணி 17 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டால். அந்த 17 பேர்களும் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.
9. 2005 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சரி எஸ் நாயர் என்ற பெண் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி 6 நபர்களால் கற்பழிப்பட்டால். இதில் இவளை இது போல செய்ததற்க்கு முக்கிய காரணம் லதா நாயர் என்கின்ற பெண்மணிதான்.
10. அதே 2005 ஆம் இம்ரான என்கின்ற பெண்மணி தன்னுடைய மாமனாறினாலேயே கற்பழிக்கபடுகிறாள். இதர்க்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கபடவில்லை.
இங்கே மேல குறிப்பிட்டது மட்டுமில்லாமல் இந்தியாவில் இன்னும் ஏறலாமான கர்ப்ழிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது,அதுமட்டுமில்லாத மேலே உள்ள எந்த ஒரு கற்பழிப்பீர்க்கு மரணதண்டனை விதிக்கவில்லை, பெண்களை புனிதமாக பார்க்கும் இந்த இந்திய திருநாட்டில் இந்த தெருநாய்களை இப்படி விட்டால், 2020 இல்லை, உலகம் அழியும் வரை இந்தியா வல்லரசில்லை, ஒரு புள்ளை புடுங்க கூட லாய்க்கில்லாமல் போய்விடும்.
ஒவ்வொரு முறையும் எதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அரசியல் வாதிகள் அறிக்கை விடுவார்கள், மாதர் சங்கங்ககள் போராட்டம் செய்வார்கள், நீதிமன்றம் விசாரணைக் கமிசன்கள் வைப்பார்கள், கலாச்சாரக் காவலர்களோ பெண்ணின் உடை முதல் உணவு வரை தான் காரணம் எனக் கூறி அலம்புவார்கள். பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி என்பது கானல் நீரே ஆகும்.
இதர்க்கெல்லாம் ஒரே திர்வு , இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள்தான்!
ஒருத்தன் திருடுறானா? கைய்ய வெட்டு, ஒருத்தன் கொலை செய்கிறானா?தூக்கில் போடு (கொலையானவனுடைய உறவினர்கள் மன்னித்தால் அவனை மன்னித்துவிடு), நான் ஒன்றும் உங்களை முழுவதுமாக இஸ்லாத்திர்க்கு வார சொல்லவில்லை, குறைந்தது உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துங்கள்,மிருகத்தை விட கேவலமான இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து தூக்கிலிடுங்கள், இல்லை மக்களிடத்தில் விட்டுவிட்டு இவர்கள்தான் என்று கூறிவிட்டு சென்று விடுங்கள், மாற்றத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
மேலும் இறைவன் தான் திருமறையில் கூறிகின்றான்:- -
நபியே நீர் மூமீனான ஆண்களுக்கு கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும், அது அவர்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம், அது மாநாகேடனாதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.
ஆண்களும் பெண்களும் எப்படி காட்டுபாட்டுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல், இதற்க்கு ஒரு மாத சாயம் பூசாமல், ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால்,குறைந்தது 2050 இல் ஆவது இந்தியா நல்லரசு ஆக வாய்ப்புள்ளது.
reference
youtube.com
Tamilquran
0 comments:
Post a Comment